சினிமா செய்திகள்

முதல்படத்திலேயே 12 கோடி இலாபம் – நயன்தாரா உற்சாகம்

‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இது ப்ளைன்ட் என்கிற கொரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று செய்திகள் வந்தன.

அச்செய்தியை இன்று உறுதிப்படுத்தியுள்ளார் விக்னேஷ்சிவன்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதோ ஒரு உற்சாகமான அறிவிப்பு! விரைவில் எங்கள் அடுத்த டிஸ்னிப்ளஸ்ஹாட்ஸ்டார் மூவி! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்! விரைவில்.

என்று சொல்லியிருக்கிறார்.

இந்தப்படம் சுமார் இருபத்தியிரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி இந்தி உரிமை சுமார் இரண்டு கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறதாம்.

இந்தப்படத்துக்கு நயன்தாராவின சம்பளத்தையும் சேர்த்து சுமார் பனிரெண்டு கோடி செலவாகியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.அப்படியானால் இப்படத்தில் சுமார் பனிரெண்டு கோடி இலாபம் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

தயாரித்த முதல்படமே பெரிய இலாபத்தைக் கொடுத்திருப்பதால் விக்னேஷ்சிவனும் நயன்தாராவும் உற்சாகமாக இருக்கிறார்களாம்.

Related Posts