சினிமா செய்திகள்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்குத் தடை நீங்கியதா? நீடிக்கிறதா?

செக்ஸ் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம்கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம், மே 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின், திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதிக் கடிதம் பெற்ற பிறகே அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இருட்டுஅறையில்முரட்டுக்குத்து படத்தின் தயாரிப்பாளர், சங்கத்தின் அனுமதிக் கடிதம் பெறாமலே வெளியீட்டுத் தேதியை அறிவித்தார்.

இதனால், கோபமான தயாரிப்பாளர் சங்கம், மே 4 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்கு நங்கள் அனுமதிக் கடிதம் கொடுக்கவில்லை என்று ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருந்தது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த வெளிப்படையான எதிர்ப்பு காரணமாகப் படம் வெளியாகுமா? என்கிற குழப்பம் உண்டானது.

ஆனால், இந்தப்படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்த ஆதரவு காரணமாக, படம் வெளியீட்டிற்கான அனுமதிக் கடிதத்தைக் கொடுத்துவிட்டதாம் தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதனால் தயாரிப்பாளர் அறிவித்தபடி மே 4 ஆம் தேதி படம் வெளியாகிவிடும்.

Related Posts