கார்த்தியின் சுல்தான் – தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் விலை விவரம்
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிடப்படவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இப்போது படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை, ஆந்திர விநியோக உரிமை ஆகியன குறித்த அறிவிப்புகளைப் பட நிறுவனம் வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கான விலை சுமார் எட்டேகால் கோடி என்றும் சொல்லப்படுகிறது.











