எச்.வினோத் இயக்கத்தில் விஜய்சேதுபதி – புதிய தகவல்
விஜய்சேதுபதி நடிப்பில், காத்து வாக்குல ரெண்டு காதல்,விக்ரம் உட்ப்ட பல படங்கள் தயாராக இருக்கின்றன. தற்போது மேலும் சில படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அந்தப்புதிய படத்தை இயக்கப்போகிறவர் எச்.வினோத் என்றும் சொல்லப்படுகிறது. அஜீத்தை வைத்து நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத், இப்போது அஜீத்தின் 61 ஆவது படத்தை இயக்கவிருக்கிறார்.
அஜீத் 61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. விரைவில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்கிறார்கள்.
அதை முடித்துவிட்டு இயக்குநர் எச்.வினோத் வருவதற்குள் இப்போது இருக்கும் படங்களை முடித்துவிட்டு விஜய்சேதுபதி வருவாராம்.
அதன்பின் இருவரும் இணையும் படம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தைத் தயாரிக்கப்போவது காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தைத் தயாரித்துள்ள லலித்குமார்தான் என்றும் சொல்கிறார்கள்.











