ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின்? உண்மை என்ன?
நடிகர் விஜய் சங்கீதா தம்பதியரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார் என்றும் அவர் இயக்கும் முதல்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஜேசன் சஞ்சய் இயக்குநர் என்ற அறிவிப்பு தவிர வேறெதுவும் சொல்லப்படவில்லை.
இந்நிலையில் அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நாயகன் யார்? என்பதைத் தீர்மானிக்கத் திட்டமிட்டிருக்கிறாரகள்.
ஜேசன் சஞ்சய் சொன்ன கதையில முன்னணி நாயகர்கள் உட்பட யாரை வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம் என்கிற நிலை.
தயாரிப்பு நிறுவனமும் நீங்கள் எந்தக் கதாநாயகனைத் தேரவு செய்தாலும் எங்களுக்குச் சம்மதம் என்றதோடு முன்னணி நாயகராக இருந்தால் நல்லது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஜேசன் சஞ்சய்யோ, இந்தப்படத்துக்கு முன்னணி நாயகர்கள் வேண்டாம்.முதல்படத்திலேயே அவர்களைக் கையாள வேண்டாம் என நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூன்று கதாநாயகர்களின் பெயர்களைச் சொல்லி இவரகளில் யாராவது ஒருவர் இருந்தால் நல்லது என்று சொல்லியிருக்கிறார்.
அம்மூவர் எவர்?
அதர்வா, கவின், துருவ் விக்ரம் ஆகிய மூவரில் ஒருவரை ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்.
இம்மூவருமே இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனால் இவர்களில் யாருடைய தேதிகள் ஒத்துவருகிறதோ? அவரை நடிக்க வைக்கலாம் என்பது முடிவு.
இப்போது இவர்களிடம் கதை சொல்லும் வேலை நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
யாருக்கு முழுமையாகக் கதை பிடிக்கிறது? என்பது முதல்கட்டம். அடுத்து அவர்களுடைய தேதிகள்.
இவை எல்லாம் சரியாக அமைந்தால் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
ஜேசன் சஞ்சய் ஒவ்வொரு கட்டத்தையும் மிக நிதானமாகத் திட்டமிட்டு நகர்த்துகிறார் என்று தயாரிப்புத் தரப்பில் மகிழ்சசி தெரிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
நல்ல தகவல்தான்.











