சினிமா செய்திகள் நடிகர்

இசையமைப்பாளருடன் தனுஷ் சமரசம்

இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.

2006 ஆம் ஆண்டு இறுதியில் அந்தப்படம் வெளியானது. அதன்பின் நிறையப்படங்களில் பணியாற்றும் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் மாறினார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி தான் கதாநாயகன். இசையமைப்பாளரும் அவரே.

இப்படத்தில் ஒரு பாடலுக்காக நடிகை அதிதிராவைப் பாட வைத்தார்.

மற்றொரு பாடலுக்காக நடிகர் தனுஷை பாட வைத்துள்ளார்.

தனுஷ் நடித்த ஆடுகளம், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். மயக்கம் என்ன படம் உருவான நேரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இப்போது இருவரையும் இணைத்து வைத்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

அதன்பயனாக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடலொன்றைப் பாடி முடித்துள்ளார் தனுஷ்.

இயக்குநர் வசந்தபாலன், தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகிய மூவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

Related Posts