விஜய் 65 பட ஒளிப்பதிவாளர் வெளியிட்டுள்ள புதிய தகவல்
விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது.
அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார்.
டிசம்பர் 10,2020 மாலை ஐந்து மணிக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
வழக்கம்போல் அறிவிப்பில்லாமல் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் கலாநிதிமாறன், விஜய், இயக்குநர் நெல்சன் ஆகியோர் இருக்கும் ஒரு காணொளி மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய மனோஜ்பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்பின் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விஜய்யுடன் அடுத்த பயணத்தில் இணையவிருக்கிறேன், மாநிலம் முழுதும் கொண்டாடப்படும் விஜய் விரைவில் இந்தியா முழுதும் கொண்டாடப்படுவார். தளபதி 65 படம் ஓர் இந்தியப்படமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
இதன்படி, மாஸ்டர் படம் போல் இப்படமும் தென்னிந்திய மொழிகளோடு இந்தியிலும் வெளியாகும் என்பது தெரியவருகிறது.











