சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் புதிய நாயகி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் .

அதைத் தொடர்ந்து இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் அந்தப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

எஸ் கே 15 என்று சொல்லப்படும் அப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் நாகார்ஜூனா அமலா தம்பதியினரின் மகன் அகில் நாயகனாக நடித்த ஹலோ என்கிற தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தத் தகவலை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Posts