விஜய் கொடுத்த முப்பது கோடி – கசிந்த உயர்மட்ட இரகசியம்
நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ்.இவரை மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக்கினார் விஜய்.
இதனையடுத்து ஜெகதீஷ், தி ரூட் என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் சேஷம் மைக்கில் ஃபாத்திமா.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை இயக்குநர் மனு.சி.குமார் இயக்கியுள்ளார்.சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தை, பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது தி ரூட் நிறுவனம்.
இந்நிலையில், தி ரூட் நிறுவனம் தனது இரண்டாவது படத்தை அறிவித்துள்ளது.ரிவால்வர் ரீட்டா எனப்பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய சந்துரு, இந்தப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளிவந்தது.
விஜய்யின் மேலாளராக இருப்பவர் கல்யாணி பிரியதர்சனை வைத்து மலையாளத்தில் படமெடுப்பதே அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்திய நிலையில் கீர்த்திசுரேஷை வைத்து தமிழில் ஒரு படம் எடுக்கிறார் என்கிற அறிவிப்பு அந்த வியப்பை மேலும் அதிகரித்தது.
ஏனெனில் பிரபல தயாரிப்பாளர்களே தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர் எப்படி படத்தயாரிப்பில் இறங்கினார்? இவருக்கு ஏது அவ்வளவு பணம்? ஆகிய கேள்விகளால் எழுந்ததே அந்த வியப்பு.
இதுகுறித்துத் திரையுலக வட்டாரத்தில் கசிந்து உலவும் ஓர் உயர்மட்ட இரகசியத் தகவல் அந்த வியப்புக்குப் பதிலளிப்பதாக உள்ளது.
அது என்னவென்றால்? தி ரூட் நிறுவனத்தின் சார்பில் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நடிகர் விஜய் சுமார் முப்பது கோடியை ஜெகதீஷிடம் கொடுத்துள்ளார் என்றும் அந்தப்பணத்தை முதலீடாகக் கொண்டே படங்கள் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் முழு உண்மை என்றால், சேஷம் மைக்கில் ஃபாத்திமா மற்றும் ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களின் ஒரிஜினல் ஓனர் விஜய் தான் என்கிறார்கள்.











