பத்து கோடி கேட்ட நயன்தாரா ஒப்புக்கொண்ட புதுநடிகர்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள், அக்கடையின் விளம்பரப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார்.
அவரை வைத்து விளம்பரப்படங்கள் எடுத்த இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி ஆகிய இருவரும் அவரைக் கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
திரைப்படம் எடுப்பதற்கும் அதில் நாயகனாக நடிப்பதற்கும் முதலில் மறுத்த அருள் பின்பு ஒப்புக்கொண்டாராம்.
விளம்பரங்களுக்குப் பெரிய கதாநாயகிகளை அழைத்து வந்தவர்கள் திரைப்படத்துக்கு மட்டும் சும்மா இருப்பார்களா?
நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகினார்களாம். அவரோ, நடிக்க முடியாது என்று நேரடியாகச் சொல்லாமல், எனக்கு பத்து கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
நயன்தாராவே எதிர்பாராத விதமாக அந்தச் சம்பளம் தரத் தயார் என்று சொன்னார்களாம்.
அதன்பின் ஜேடி ஜெர்ரியைத் தொடர்பு கொண்ட விக்னேஷ்சிவன், அவருக்கு வரிசையாகப் படங்கள் இருக்கின்றன எனவே அவரை விட்டுவிடுங்கள் என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இப்போது தமன்னாவை அணுகியிருப்பதாகத் தகவல்.











