சினிமா செய்திகள் நடிகர்

தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் இவர்தான்

தனுஷ் இப்போது வடசென்னை, என்னைநோக்கிப் பாயும் தோட்டா, மாரி 2 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றனவாம்.
இப்போது நடைபெறுகிற வேலை நிறுத்தம் முடிந்தவுடன் மாரி 2, என்னைநோக்கிப்பாயும்தோட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிடுவாராம்.

அதன்பின் ஜூன் முதல் அவரே இயக்கி நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அந்தப் படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிட்டிருக்கிறார்களாம்.

அந்தப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவ்வளவு செலவையும் தனுஷ் ஒருவர் இருந்தால் மட்டும் மீட்க முடியாது என்பதால், அதை தென்னிந்தியப் படமாக மாற்றிவிடும் முயற்சியில் இருக்கிறார்களாம்.

இந்த முடிவின் காரணமாக ஆந்திராவிலிருந்து நாகார்ஜுனா, கர்நாடகாவிலிருந்து சுதீப் ஆகியோரை நடிக்க வைக்கப் பேசி விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

எல்லா மொழிகளுக்கும் தெரிந்த நாயகியையும் ஒப்பந்தம் செய்யும் திட்டமும் இருக்கிறதாம்.

இந்தப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கவிருக்கிறது.

Related Posts