சினிமா செய்திகள்

சத்யராஜ் கேட்ட சம்பளம் அரண்டு போன படக்குழு – இந்தியன் 2 இழுபறி

பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.தற்போது திருப்பதி அருகே படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

இப்போது இயக்குநர் ஷங்கர் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம்.

முதல்பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை உயரதிகாரி வேடம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

அந்தவேடத்தில் சத்யராஜ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகியிருக்கிறார்கள்.

இதுவரை கமலும் சத்யராஜும் சேர்ந்து நடித்த காக்கிச்சட்டை, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் அவர்கள் எதிரும்புதிருமாகப் பேசிக்கொண்ட வசனங்களை வைத்துக் காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம்.

இதனால் அவரை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள்.

திரைக்கதையைக் கேட்டுவிட்டு உடனே ஒப்புக்கொண்டாராம் சத்யராஜ்.

ஆனால் அதன்பின் அவர் கேட்ட சம்பளத்தால் அரண்டு போயிருக்கிறதாம் படக்குழு.

அவருக்கு சுமார் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டதால் ஒரு நாளைக்கு ஒரு கோடி கொடுத்துவிடுங்கள் என்று கேட்டாராம் சத்யராஜ்.

படக்குழுவுக்குப் பேரரதிர்ச்சி. அதேசமயம் அவரைத் தவிர்த்து வேறு யார் நடித்தாலும் அந்த வேடம் பெரிதாகப் பேசப்படாது எனும் நிலை. இதனால் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லி மன்றாடிக் கொண்டிருக்கிறார்களாம்.

சத்யராஜ் என்ன முடிவெடுக்கப் போகிறார்? படத்தில் அவர் இருப்பாரா? இல்லையா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Related Posts