சினிமா செய்திகள்

உதவியாளர் கைது பதட்டத்தில் விஜய் – வாரிசு படப்பிடிப்பில் என்ன நடந்தது?

விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு சென்னை ஈவிபி அரங்கில் நடந்துகொண்டிருக்கிறது.ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அதில் விஜய் நடனமாடிக் கொண்டிருந்திருக்கிறார்.வெட்ட வெளியில் நடந்த அப்படப்பிடிப்பை டிரோன் மூலம் படம்பிடித்திருக்கிறது ஒரு தனியார் தொலைக்காட்சி.

படப்பிடிப்பு நடக்கும்போது அங்கு புகைப்படம் கூட எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அப்படிப்பட்ட இடத்தில் விஜய் நடனமாடிக் கொண்டிருப்பதை காணொலி மூலம் படம் பிடித்தது யார்? என்று தேடிப்போய்ப் பார்த்தால் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து அந்த டிரோனை இயக்கியிருக்கிறது தனியார் தொலைக்காட்சி நிறுவனம். உடனே அந்நிறுவனத்தைச் சேர்ந்தோரை ஒரு மகிழுந்தில் அழைத்து வந்திருக்கிறது படக்குழு.

அந்த மகிழுந்தில் வைத்து அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் உதயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த உதயகுமார் என்பவர் ஷங்கர் உட்பட பலருக்கு மேலாளராகப் பணியாற்றியவர். பல பெரிய செலவுப் படங்களுக்கு நிர்வாகம் பார்த்தவர்.

இப்போது நடிகர் விஜய்யிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

எந்தப்படக்குழுவாக இருந்தாலும் விஜய்யின் படப்பிடிப்பு எங்கே? எத்தனை மணிக்கு அவர் வரவேண்டும்? என்கிற தகவல்களை நேரடியாக விஜய்யிடம் பேசிவிடமுடியாது, எல்லாத் தகவல்களும் உதயகுமாரிடம்தான் சொல்லவேண்டும் அவர்தான் விஜய்யிடம் சொல்வார்.

இதுபோல் படக்குழுவுக்கும் விஜய்க்கும் பாலமாக இருந்து வரும் அவரை கைது செய்திருப்பதால் விஜய் மிகவும் பதட்டமாக இருக்கிறாராம்.

ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் படப்பிடிப்பை இரத்து செய்யாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய்.

Related Posts