சினிமா செய்திகள்

அழைப்பை ஏற்காத அல்லுஅர்ஜுன் நொந்துபோயிருக்கும் முருகதாஸ்

விஜய்யின் 65 ஆவது படத்தை முதலில் இயக்கவிருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏ.ஆர்.முருகதாஸ் விலகிக்கொண்டார். எனவே,விஜய் 65 படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அதேசமயம், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ஒரு குரங்கை வைத்து அனிமேசன் படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜுன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர்.

அப்படியா? என விசாரித்தால்?

விஜய் 65 படத்தை முடித்துவிட்டு அல்லுஅர்ஜுன் படத்தை இயக்குவதாக ஒரு பேச்சு இருந்தது உண்மைதான்.

ஆனால், விஜய் படம் இல்லையென்றானதும் ஏ.ஆர்.முருகதாஸ் பலமுறை தொலைபேசியில் அழைத்தும் அல்லுஅர்ஜுன் அழைப்பை ஏற்கவேயில்லையாம்.

இதனால், ஏ.ஆர்.முருகதாஸ் மிகவும் நொந்துபோயிருக்கிறாராம்.

இந்த விசயம் அறியாமலே அந்தத் தயாரிப்பாளர் பேசியுள்ளார் என்று சொல்கிறார்கள்.

Related Posts