சினிமா செய்திகள்

தெலுங்கு இயக்குநர் வேண்டாம் – விஜய் அதிரடி முடிவு

விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் வந்துபொண்டிருக்கின்றன.

அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இயக்குநர் வம்சி அளித்த ஒரு பேட்டியில் இது குறித்துக் கூறியிருந்தார்.

ஆனால், இப்போது விஜய் அந்த இயக்குநரோடு பணிபுரிய மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில், இயக்குநர் வம்சி, முழுக்கதை சொல்லாமல் மையக்கதை மற்றும் அதை எப்படிக் கையாளப்போகிறோம் என்பதை மட்டும் சொல்லியிருந்தாராம்.

அதில், முழுமையாகத் திருப்தி அடையாத் விஜய், முழுமையான திரைக்கதையை உருவாக்குங்கள் எனச் சொல்லியிருந்தாராம்.

அவரோ, திரைக்கதை உருவாக்கத்துக்கு முன்பாக அதைப்பற்றிப் பொதுவெளியில் பேசியது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.

இதனால், அதந்தப்படம் வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும் அது வெற்றி பெறாது என்கிறார்கள்.

பார்க்கலாம்.

Related Posts