சினிமா செய்திகள்

நடிகர் கவினுக்குக் கல்யாணம்

நடிகர் கவின் இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் படமொன்று, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் இன்னொன்று.

இவற்றில் இளன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையுமுன்பே, நடன இயக்குநர் சதீஷ் படத்துக்குப் போய்விட்டார். அந்தப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு மீண்டும் இளன் படத்துக்கு வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஆனால்,நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படமும் முழுமையாக முடிவடையவில்லை. இரண்டு கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் இரண்டு கட்டப் படப்பிடிப்பு திட்டமிடப்படுகிறதாம்.

இந்நிலையில் அந்தப்படத்தை விட்டுவிட்டு இளன் படத்துக்குச் செல்கிறாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பை மொத்தமாக முடித்துவிட்டு மீண்டும் நடன இயக்குநர் சதீஷ் படத்துக்கு வருவதாகத் திட்டம்.அதனால், இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறாராம்.

இளன் படத்தில் சுமார் பத்துநாட்கள் நடித்தால் போதும் என்று சொல்லப்பட்டது. அதுவே கொஞ்சம் அதிகமானால் இன்னும் பத்துநாட்கள் சேர்த்து இருபது நாட்கள் போதும்.

அப்படியிருக்கும் போது, அடுத்த படத்தை இரண்டு மாதங்கள் தள்ளிப் போடுவது ஏன்? என்றால் ஒரு ஆச்சரியமான தகவல் வருகிறது.

அது என்னவென்றால்?

கவினுக்குக் கல்யாணமாம். இளன் படத்தை முடித்துவிட்டு திருமணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். திருமணம், தேனிலவு ஆகியன முடிந்த பின் மீண்டும் நடன இயக்குநர் சதீஷ் படத்துக்குச் செல்லவிருக்கிறார் என்கிறார்கள்.

யார் பெண்? எப்போது திருமணம்? என்பதையெல்லாம் அவரே விரைவில் சொல்லவிருக்கிறாராம்.

சொல்லட்டும். காத்திருப்போம்.

Related Posts