அதர்வா குட்நைட் மணிகண்டன் மோதல் – மத்தகம் இணையத்தொடர்
நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் மத்தகம் என்கிற இணையத்தொடர் உருவாகியுள்ளது. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியைக் குறிக்கும் சொல். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.
ஸ்கிரீன் சீன் நிறுவனம் (Screen Scene Media Entertainment) தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடரில், பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தத் தொடரின் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளைப் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.
இதன் குறுமுன்னோட்டம் வெளியாகியுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்தத் தொடரின் கதையும் ஓர் இரவில் நடப்பவை என்பதை அழகாக விவரிக்கிறது.
ஒரு இரவில் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் குரலுடன் டீசர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெகு பரபரப்பான காட்சிகளைக் காட்சிப்படுத்துகிறது.
டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான காவல்துறை அதிகாரியாகவும், குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள்.
வெகு சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கும் டீசர், இரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டுவதுடன், இந்த சீரிஸ் ஒரு அற்புதமான த்ரில்லராக இருக்கும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகிறது.
டீசர் பார்க்க….











