இணையத்தொடரின் தொடக்கத்திலேயே விஜய்சேதுபதியின் தலை மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.அவருடைய உடல் எங்கே? என்கிற காவல்துறையின் தேடலில் விரிகிறது தொடர். முத்து என்கிற அலியாஸ் காட்டான் எனும் வேடத்தை ஏற்றிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடரின் தலைப்பில் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தொடரையும் தன் தலையில்
தேசியவிருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி.அஜித்குமார் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத்தொடரில் விஜய்சேதுபதி,மிலிந்த் சோமன், சுதேவ்நாயர்,முத்துக்குமார்,சிங்கம்புலி,கலைவாணி பாஸ்கர்,வி ஜே பார்வதி,ரிஷா ஜேக்கப்,வடிவேல் முருகன்,அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது
ஜூலை 25 ஆம் தேதி தலைவன் தலைவி படம் வெளியானது.பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூல் செய்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.இவ்வளவுக்கும் விஜய்சேதுபதியின் இதற்கு முந்தையபடமான ஏஸ் தோல்வி அடைந்திருந்தது. ஆனால்,இந்தப்படம் நல்ல வசூலைப்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன். அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது. அன்று காலை
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர் உட்பட பலர் நடித்திருந்த படம் வடசென்னை.2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.முதல்பாகம் வெளியான போதே அப்படத்தின் இரண்டாம்பாகமும் உருவாகும் என்று சொல்லியிருந்தனர். அதனால், தனுஷ் வெற்றிமாறன் ஆகியோர் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் வடசென்னை 2 எப்போது?
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் உருவான இப்படம் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா சனவரி 31 அன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி
குடும்பஸ்தன் என்ற சொல் குடும்பக் கஷ்டங்களை வெளிப்படுத்தக் கூடிய சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பெயரில் வெளியாகியிருக்கும் படத்திலும் அதுவே தான் இருக்கிறது.அதேநேரம், இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் எனும் குறள் வழி படம் நெடுக சிரிக்க வைத்திருக்கிறார்கள். நாயகன் மணிகண்டனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலித்து சாதிகடந்து திருமணம்
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் படம் ‘குடும்பஸ்தன்’.சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்வில்,ஆடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது…. எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு
எவ்வளவு பேசினாலும் தீராதது உறவுச்சிக்கல்கள். அதிலும் ஆண் பெண் உறவு குறிப்பாக காதல் உணர்வுக்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.அவை குறித்துப் பேசவும் நிறைய உண்டு. அப்படி ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார் இயக்குநர் பிரபுராம்வியாஸ். நாயகன் மணிகண்டனுக்கு சொந்தமாக ஒரு குளம்பிக்கடை (காபி கடை அல்லது கஃபே) வைக்க ஆசை. அதற்கும் முன்னதாகவே நாயகியுடன் காதல். காதலி
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்புப் பணிகளை பரத்





















