சினிமா செய்திகள்

அதிர்ஷ்டக்கார அதர்வா தம்பி – அவர் நடிக்கும் பட விவரம்

விஜய்யின் மாஸ்டர் படத்தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாபிரிட்டோவுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது.

ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை.

மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ.

அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில்,

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

பன்முகத் திறமை வாய்ந்த இயக்குநர் விஷுணுவர்தனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நடிகர் முரளியின் மகனும் அதர்வாமுரளியின் இளைய சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார்.

இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும்.

எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நலன்விரும்பிகளுக்கும் எங்களது எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இவ்வாறு கூறியிருந்தார்.

அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதெனச் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதைவிட முக்கியச் செய்தி இந்தப்படத்தின் மொத்த செலவுத்தொகை என இப்போது கணக்கிடப்பட்டிருக்கும் தொகை பதினேழு கோடி என்று சொல்லப்படுகிறது.

அறிமுக நடிகர் படத்திற்கு பதினேழு கோடி என்பது வியப்பிலும் வியப்பான செய்தி. ஆனால் இது மருமகனுக்காக மாமனார் செய்யும் செலவென்பதால் வழக்கமான திரைப்படக் கணக்கில் இந்தச் செலவு வராது என்கிறார்கள்.

அதிர்ஷ்டக்கார மருமகன்.

Related Posts