சினிமா செய்திகள்

மீண்டும் தொலைக்காட்சி தொகுப்பாளராகும் விஜய்சேதுபதி – கமலுக்கு நிகரான சம்பளம்

சன் தொலைக்காட்சியில் புதிதாக சமையல் நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்படவிருக்கிறதாம். இது செய்தியில்லை. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் விஜய்சேதுபதி என்பதுதான் செய்தி.

ஏற்கெனவே சன் தொலைக்காட்சியில், நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் விஜய்சேதுபதி.

மீண்டும் அவரை வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கவிருப்பது சன் தொலைக்காட்சி அல்ல.விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் எண்டமோல் நிறுவனம் என்கிறார்கள்.

வார இறுதிநாட்களான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஒளிபரப்பப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கும் விஜய்சேதுபதிக்குக் கொடுக்கப்படும் சம்பளம் மூன்று கோடி என்று சொல்லப்படுகிறது.

ஒரு வாரத்துக்கு அதாவது இரண்டு நிகழ்ச்சிகளுக்கு மூன்று கோடி என்று சொல்லப்படுகிறது.

பிக்பாஸை தொகுத்து வழங்கும் கமலுக்கெ மிக நெருக்கமாக சம்பளம் வாங்குகிறார் என்பதால் விசயமறிந்தவர்கள் வியப்படைகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி பெரும் வரவேற்புப் பெற்றிருக்கிறது. அதற்கு எதிராகத்தான் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறதாம்.

விஜய்யில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும் எண்டமோல் நிறுவனம் அத்தொலைக்காட்சிக்கு எதிரான ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்து சன் தொலைக்காட்சிக்குக் கொடுக்கவிருப்பது தொலைக்காட்சி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Related Posts