கமல் கேட்ட நூறு கோடி தயாரிப்பு நிறுவனம் விதித்த நிபந்தனை
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்கவுள்ளது.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சபாஷ்நாயுடு என்றொரு படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதிவரை நடந்ததோடு நிற்கிறது.
அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்த அந்தப் படத்தின் இயக்குநர் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அப்படம் அப்படியே நின்றிருக்கிறது.
அந்தப்படத்துக்கு என்ன பதில்? என்று லைகா நிறுவனம் கமலிடம் கேட்டுக் கொண்டிருந்ததாம்.
அதர்குப் பதிலளிக்காமல் தவிர்த்து வந்த கமல், இப்போது ஒரு தீர்வைச் சொல்லியிருக்கிறாராம்.
சபாஷ்நாயுடு படத்தைத் தொடருவது சாத்தியமில்லை அதற்குப் பதிலாக இன்னொரு படம் உங்கள் நிறுவனத்துக்குச் செய்து தருகிறேன் என்று சொன்னாராம்.
அதற்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதை தேவர் மகன் 2 என்கிறார்கள்.
தேவர் மகன் 2 படத்துக்கு பட்ஜெட் சுமார் நூறுகோடி என்று சொல்லியிருக்கிறார் கமல். தயாரிப்பு நிறுவனமோ, அவ்வளவு தரவியலாது, அதுமட்டுமின்றி சபாஷ் நாயுடுவுக்கு செலவழித்த தொகையைக் கழித்துக் கொண்டுதான் இப்படத்துக்கான நிதி ஒதுக்குவோம் என்று சொன்னதாம்.
அதை கமல் ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அது சம்பந்தமான பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் விரைவில் அறிவிப்பு வருமென்றும் சொல்கிறார்கள்.











