சினிமா செய்திகள்

இவருக்குப் பதில் இவர்.. இந்தியன் 2-வில் இணைந்த புதிய நடிகை

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’.  துவக்கத்திலிருந்தே எக்கச்சக்க சிக்கல்களை இப்படம் சந்தித்துவருகிறது.

படத்துக்காக கமல்ஹாசனின் மேக்கப் திருப்திகரமாக இல்லை என சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. தொடர்ந்து, படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தால் படப்பிடிப்பு நின்றது. கொரோனாவினால் எக்கச்சக்க மாறுதல்களைச் சந்தித்தது. அதோடு, விக்ரம் படத்துக்கு கமலும், தெலுங்கு படத்தை இயக்க ஷங்கரும் சென்றதால் படப்பிடிப்பு முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.

தற்பொழுது, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. கமல்ஹாசனுக்கு நாயகியாக படத்தில் காஜல் அகர்வால் நடித்துவருகிறார். கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால், காஜல் அகர்வாலுக்குப் பதிலாக புதிய நடிகையை நடிக்க வைக்க சில நாட்களாகவே பேச்சுவார்த்தை நடந்துவந்தது.

அதன்படி, காஜல் அகர்வாலுக்குப் பதில் தமன்னாவை நடிக்க வைக்க இருக்கிறதாம் படக்குழு. இந்தியன் 2 படத்துக்காக ஒரு வாரம் படப்பிடிப்பு மட்டுமே காஜல் அகர்வால் கலந்துகொண்டாராம். அதனால், தமன்னாவை வைத்து முதலிலிருந்து முழுவதுமாக படப்பிடிப்பு எடுத்துவிட படக்குழு முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts