பா.ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ செம ஹிட். ஓடிடியில் வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரஞ்சித்தின் அடுத்தப் படத்தின் ஹீரோவாக விக்ரம் தேர்வாகியுள்ளார். விக்ரம் நடிக்க பா.ரஞ்சித் இயக்கும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் டிசம்பர் இறுதி வாரத்தில் துவங்க இருக்கிறது.
சார்பட்டா பரம்பரை படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து அடுத்தப் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால்,விக்ரம் படத்தை முடித்தப் பிறகுதான், கமல் படம் பற்றிய பேச்சுகள் துவங்கும் என்று தெரிகிறது.
ரஞ்சித்துக்கு ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ படம் தயாராகிவருகிறது. அதுபோல, விக்ரம் கைவசம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ’மகான்’ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
பா.ரஞ்சித் இயக்கும் படமானது விக்ரமின் 61வது படமென்பது குறிப்பிடத்தக்கது.











