மோகன்.ஜி-யின் அடுத்த படத்தில் செல்வராகவன் ?
ரிச்சர்ட் ரிஷி நடித்த ருத்ரதாண்டவம், திரெளபதி படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. இரண்டு படங்களுமே பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோகன்.ஜியின் படங்கள் சாதியப் பெருமிதம் கொண்டதாக இருக்கும் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையும் உண்டு.
இந்நிலையில், அடுத்தப் படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார். இந்த முறை சாதியப் படமாக இல்லாமல், பொதுவாக பொழுதுபோக்கு சினிமாவாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.
முந்தைய இரண்டு படங்களில் ரிச்சர்ட் நடித்திருப்பார். இந்த முறை புதிய நடிகருடன் பணியாற்ற விரும்புகிறார். அதன்படி, மோகன்.ஜியின் அடுத்தப் படத்தில் செல்வராகவன் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், முதல் பிரதி அடிப்படையில் இவரே தயாரிப்பார் என்றும் சொல்கிறார்கள்.
இயக்குநராக கவனிக்கத்தக்கப் படங்களைக் கொடுத்தவர் செல்வராகவன். சாணிக் காயிதம் எனும் படத்தில் நடித்துவரும் நிலையில், தற்பொழுது மோகன்.ஜி-க்கு ஓகே சொல்லியிருக்கிறார்.











