சினிமா செய்திகள்

‘தல வேண்டாம்’… அஜித் திடீர் அறிக்கை !

ஜித் நடிப்பில் வலிமை படம் பரபரப்பாக தயாராகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் படத்தை தயார் செய்துவருகிறது வலிமை படக்குழு.

நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர் அஜித். சினிமா நிகழ்ச்சிகள், விருது விழா என எதிலும் கலந்துகொள்ளாதவர். ரசிக மன்றத்தைக் கலைத்தவர். அல்டிமேட் ஸ்டார் எனும் பட்டத்தையும் துறந்தார். இந்நிலையில், தற்பொழுது திடீர் அறிக்கை ஒன்றில் ரசிகர்களை அதிர்ச்சியுற செய்திருக்கிறார் அஜித்.

அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா மூலம் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன்,அஜித்குமார். “ என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் அஜித்தை தல என்று அன்புடன் அழைத்து வந்தனர். தல எனும் பெயரை பெரும் கெளரவமாகவே அஜித் ரசிகர்கள் நினைத்துவந்தனர். இந்நிலையில், அஜித்தின் திடீர் அறிக்கையினால் கொஞ்சம் ஷாக் ஆகிவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் வேண்டுகோளுக்காக, தல படத்தை ரசிகர்கள் பயன்படுத்தாமல் இருப்பார்களா அல்லது அன்புடன் அழைப்பார்களா என்பது வரும் காலங்களில் தெரிய வரும்.

Related Posts