300 படங்களில் முதலிடம் – 3 விருதுகளைப் பெற்ற குறும்படம்
தாய்லாந்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குறும்படம் பாசிட்டிவ் (positive).
1. Foriegn Language Award
2. Audience Online Award
3. Audience Stadium Award
ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது பாசிட்டிவ்.
ஒரு இளம்பெண் காதலிக்கிறார். கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறார். கல்யாணம் செய்ய முயன்றும் தடைகள் ஏற்படுகின்றன. அதற்குள் கருவில் இருந்த சிசுவும் வளர்ந்து விடுகிறது. இருப்பினும் கருக்கலைப்பு செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிடுகின்றனர்.
திடீரென வயிற்றிலிருந்த குழந்தை தாயின் கண் முன்னே தோன்றி என்னைக் கொல்லாதே அம்மா என்று சொல்வது போல் அந்தப் பெண்ணுக்குத் தோன்றுகிறது.உடனே அவர் மனம் மாறுகிறார்.இவ்வாறான மனதைத் தொடும் கதைதான் 20 நிமிட குறும் படமாக உருவாகியுள்ளது.
கதையின் பாத்திரங்களாக ஸ்ரீ, ராஜா, பானு ஆகியோர் நடித்துள்ளனர்.
தாய்லாந்தில் இது போன்ற அவல நிலை நிலவி வருவது எல்லோரும் அறிந்த செய்தி. இந்தக் குறும்படத்தைப் பார்த்து
சிலர் திருந்தினால் அதுவும் விருது தான் என்கிறார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அமின்
இவர் இதுவரை 50 குறும்படங்களை இயக்கி உள்ளார். அனுபவம் புதுமை எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இக்குறும்படத்துக்கு ஒளிப்பதிவு :ஜெயம் கொண்டான், இசை: கஜா தானு












