September 20, 2026
சினிமா செய்திகள்

விஜய்யா? பிரபாஸா? – குழப்பத்தில் இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார். தொடங்கியதோடு நின்றிருக்கிறது.

அது மேற்கொண்டு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன என்கிறார்கள்.

இந்நிலையில் ஷங்கர் அதிரடியாக அடுத்த படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார் என்று சொல்லப்பட்டது.

இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிட்டாராம்.

இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.

முதல்வன் 2 படத்தில் விஜய் நாயகனாக நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்னொரு பக்கம், இயக்குநர் லிங்குசாமியின் முயற்சியில் ஷங்கருக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடுவதற்கேற்ப ஒரு படம் இயக்குங்கள் என்று ஷங்கரிடம் கேட்டிருக்கிறார்கள்.

அப்படத்தைத் தயாரிக்க மும்பையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கிறதாம்.

இதனால், விஜய்யா? பிரபாஸா? என்கிற குழப்பத்தில் ஷங்கர் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் தரப்பில் இதுபற்றிக் கேட்டால், 2.ஓ படத்தை சீன மொழியில் வெளியிடும் வேலைகளில் இயக்குநர் தீவிரமாக இருக்கிறார். அப்படம் சீனாவில் வெளியான பின்பே அடுத்த படம் பற்றி முடிவெடுப்பார் என்கிறார்கள்.

Related Posts