சினிமா செய்திகள்

சிந்துபாத் ரிலீஸ் விவகாரம் – விஜய்சேதுபதி வருத்தம்

விஜய்சேதுபதி அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் சிந்துபாத்.

இப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.

படத்தைத் தயாரித்திருக்கும் ராஜராஜன் மற்றும் படத்தில் இணைந்திருக்கும் வன்சன் மற்றும் கிளாப் போர்டு சத்யா ஆகிய மூவருக்கும் தனித்தனியாகச் சிற்சில சிக்கல்கள்.

அவற்றின் காரணமாகப் படம் வெளியாவது தள்ளிப் போனது.

எல்லாச் சிக்கல்களும் முடிந்து ஜூன் 28 அன்று படம் வெளியாகும் என்று சொல்லபட்டது.

ஆனால் சொன்னபடி சிக்கல்கள் தீர்க்கப்படவில்லையாம். அதனால் ஜூன் 28 ஆம் தேதியும் படம் வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.

இதனால் விஜய்சேதுபதி கடும் வருத்தத்தில் இருக்கிறாராம்.

முதன்முறையாக அவர் மகன் சூர்யா இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். படம் நன்றாக வந்திருக்கிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்தக் காரணங்களால் இப்பட வெளியீட்டை ஆர்வமாக எதிர்பார்த்திருந்தாராம்.

அதன் காரணமாகவே, தயாரிப்பாளரின் சிக்கலைத் தீர்க்க தன் பங்கிற்கு, ஒரு கோடி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் படம் ஜூன் 28 ஆம் தேதியும் வெளியாகாது என்பதால் கடும் வருத்தம் என்கிறார்கள்.

Related Posts