சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் ரஜினி படம் நீக்கம் – கமல் சொன்னாரா?

விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 23 முதல் ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. முதலிரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம்பாகத்தையும் நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு, சில பத்திரிகையாளர்களை பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

பதிஅனைந்து பேர் கொண்ட அந்தக்குழு ஒருநாள் அவ்வீட்டில் தங்கியிருந்தது.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது, அது தொடங்கி வீட்டைக் காட்டியவுடன்,. அந்தப்பயணத்தில் இணைந்திருந்த பத்திரிகையாளர் பரத், ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதில்,நாங்கள் தங்கியிருந்த போது ரஜினியின் ஓவியம் பிக்பாஸ் வீட்டுச் சுவற்றில் வரையப்பட்டிருந்தது.ஆச்சரியம், இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது என்று ட்வீட் போட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலளித்து வரும் ரஜினி ரசிகர்கள், கடவுள் படங்களை அந்த வீட்டில் அனுமதிப்பதில்லை என்பதால் தலைவர் படம் நீக்கப்பட்டிருக்கும் அவர் என்றும் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லிவருகிறார்கள்.

ரஜினி ஓவியத்தை கமல் நீக்கச் சொல்லியிருப்பார் என்றே அனைவரும் கருதுகிறார்கள்.

இதனால் தொடங்கும்போதே சர்ச்சை எழுந்திருக்கிறது.

சர்ச்சைகள் தானே பிக்பாஸின் பலம்.

Related Posts