கைப்புள்ள விஜய் வண்டுமுருகன் அஜீத் – தொடரும் சண்டை
ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அஜீத் ரசிகர்கள் #June22VijayDeathDay என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப்படுத்தினர்.
இதற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் நல்ல நாளில் விஜய்யைப் பற்றி இப்படிச் சொல்லலாமா? எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக விஜய் ரசிகர்கள் என்ன செய்வார்களோ? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
அவர்களோ, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்கிற குறளுக்கு ஏற்ப, அஜீத் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுக்க #LONGLIVEAJITHSIR என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப் படுத்தினர்.
கடைசியில் #ThalapathyBDayCDP என்கிற சொல் மட்டும் டிரெண்டிங்கில் இருந்தது.
ஆனால். விஜய் பிறந்தநாளன்று #என்றும்தலஅஜீத் என்கிற சொல்லை பிரபலமாக்கினர் அஜீத் ரசிகர்கள்.
அதன்விளைவு இன்றைக்கு திடீரென கைப்புள்ளவிஜய் என்று அஜீத் ரசிகர்களும் வண்டுமுருகன் அஜீத் என்று விஜய் ரசிகர்களும் ட்விட் போட்டு வருகின்றனர்.
இவை இந்திய அள்வில் டிரெண்டாகிவருகின்றன. இதைப்பார்க்கும் போது மற்ற மாநிலத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று பொதுவானவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.











