Uncategorized சினிமா செய்திகள்

வெற்றிமாறன் ராகவா லாரன்ஸ் இணையும் படம் கைவிடப்பட்டது

2021 ஜூன் 24 ஆம் தேதியன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…..

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள்.

‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை, வெற்றிமாறன் உதவியாளர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார்.

இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும்.

சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களைக் கொடுத்துவரும் ராகவா லாரன்ஸ், எஸ்.கதிரேசன், வெற்றிமாறன்,ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஆகிய இந்த நால்வர் கூட்டணியால் இந்த பிரமாண்டமான படம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

என்று சொல்லப்பட்டிருந்தது.

அதன்பின் அப்படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

சில நாட்களுக்கு முன் நயன்தாரா நடிக்கும் புதிய படமொன்றை இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.

அப்படியானால் அதிகாரம் என்னவானது?

அந்தப்படம் கைவிடப்பட்டுவிட்டதாம்.

அதற்குக் காரணம், வெற்றிமாறன் சொன்ன கதை ராகவாலாரன்சுக்குப் பிடிக்கவில்லையாம். ஓரிருமுறை கதையில் மாற்றம் செய்து அதையும் ராகவாலாரன்சிடம் போய்ச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.

எதுவும் அவருக்குத் திருப்தியாக அமையவில்லை என்பதால் அந்தப்படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் ராகவா லாரன்ஸ்.

அதனால்தான், நயன்தாரா படத்தை இயக்கப்போய்விட்டாராம் துரை.செந்தில்குமார்.

Related Posts