சினிமா செய்திகள் நடிகர்

விஷால் உள்ளிட்டோருக்கு ரஜினி எதிர்ப்பு

ஆன்மிகப் பயணமாக மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், 10 நாட்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 20) சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பியதும், அவர் வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் கூறியதாவது…

புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது.

ரத யாத்திரை என்பது மதக் கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதக் கலவரம் எந்த வடிவில் வந்தாலும், அரசு அதனைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

திரைத்துறையில் நடக்கும் வேலைநிறுத்தம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், முதலில் இருந்தே நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், சினிமாவில் வேலை நிறுத்தம் என்பதை மட்டும் செய்யவே கூடாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும்.

கமல்ஹாசன் என்னைப் பற்றிய கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை.

உங்கள் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, என் பின்னால் பாஜக இல்லை. என் பின்னால் இருப்பது கடவுளும் மக்களும்தான் என்று பதில் அளித்தார் ரஜினிகாந்த்.

Related Posts