தனுஷை விட்டுவிட்டு சிவகார்த்திகேயனிடம் வந்த இயக்குநர்
புது இயக்குநர் சிபிச்சகரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தை புது இயக்குநர் அசோக் இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். அந்தப்படத்தை ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இவர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றும் தனுஷ் தேதிக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், தனுஷை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் படத்தை இயக்க ராம்குமார் தயாராகிவிட்டாராம்.
இது தனுஷுக்குச் சொன்ன அதே கதையா? என்றால் இதுவேறு கதை என்கிறார்கள். உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.












