எம்.ராஜேஷ் சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் இதுதான்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தயாராகியிருக்கிறது.
ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை இன்று (பிப்ரவரி 2,2019) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்தப்படத்துக்கு முதலில் ஜித்து ஜில்லாடி என்று பெயர் வைத்திருந்தார்கள்.
கடைசி நேரத்தில் அந்தப் பெயரை மாற்றிவிட்டு மிஸ்டர் லோக்கல் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.
இன்று மாலை இதைத்தான் அறிவிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஏப்ரல் 5 ஆம் தேதி அல்லது 18 ஆம் தேதி ஆகிய இருநாட்களில் ஏதாவது ஒருநாள் இந்தப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. அதையும் இன்று அறிவிப்பார்கள் என சொல்கிறார்கள்.