சினிமா செய்திகள்

விஜய் அட்லீ பட கதைதிருட்டு வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இயக்குநர் அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே இன்னொரு படத்தை அதிலும் பழைய தமிழப்படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டது.

அவை படம் வெளியான பின்பு வருகிற விமர்சனங்கள். . ஆனால், இந்த முறை விஜய்யை வைத்து அவர் இயக்கும் படத்தின் அற்விப்பு வந்தவுடனே, இது என்னுடைய கதை. அதை வைத்துத்தான் விஜய் படத்தை எடுக்கிறார் என்று கே.பி.செல்வா என்கிற குறும்பட இயக்குநர் அட்லீ மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி அவர் எழுதியிருந்த கதையை பல மாதங்களுக்கு முன்பு அட்லீயிடம் கூறியிருந்தாராம். கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு பிறகு கூப்பிடுகிறேன் என்ற அட்லீ திரும்பக் கூப்பிடவே இல்லையாம்

அதனால், விஜய் 63 பட அறிவிப்பு வந்ததும், தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் கே.பி.செல்வா.

ஆனால்,.அச்சங்கத்தின் விதிகளின்படி சங்க உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்குப் பிறகே கதைதிருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை நிராகரித்திருக்கின்றனர்.

இதனால் கே.பி.செல்வா, நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அந்த வழக்கு விசாரணை நேற்று (ஏப்ரல் 23 ஆம் தேதி) நடந்திருக்கிறது.விசாரணையின் போது, விஜய் படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவன வழக்கறிஞர் ஆஜராகியிருக்கிறார்.

அப்போது இருதரபினரின் கதைகளையும் நீதிமன்றத்தில் சம்ர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டாராம். அதற்கு ஜூன் பத்தாம் தேதி வரை அவகாசம் கேட்டிருக்கிறார் ஏஜிஎஸ் வழக்கறிஞர். அதை ஏற்றுக்கொண்டு வழக்கைத் தள்ளிவைத்தாராம் நீதிபதி.

Related Posts