அமிதாப்பச்சனுடன் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா
இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இறவாக்காலம் எனும் படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவருடைய நடிப்பில் தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் ஒரு படம் தொடங்கவிருக்கிறது.
கள்வனின் காதலி, மச்சக்காரன் ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் அப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் எடுப்பது எதனால்?
ஏனெனில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கவிருக்கிறார். அதனால் இந்தியிலும் எடுக்கிறார்கள்.
அமிதாப்புடன் இணைந்து நடிப்பது மற்றும் இந்தியில் பெரிய அறிமுகம் கிடைப்பது ஆகிய விசயங்கள் ஒரு சேர நடக்கவிருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.











