விஜய்யின் அடுத்த படம் பற்றிப் பரவும் புதிய தகவல்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார்.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.
இப்படம் இந்த ஆண்டு தீபாவளி நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளிவருகின்றன.
விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அந்தப்படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கியுள்ள இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் உலாவருகின்றன.
சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை.











