சினிமா செய்திகள்

இந்திநடிகர் அக்‌ஷய்குமார் பெரிய உதவி

கொரோனா கிருமி பரவாமல் தடுக்க இந்திய ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதற்காக 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி.

அதோடு கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். இத்தொகை போதுமானதல்ல என்று பலரும் அவரை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

மார்ச் 26 ஆம் தேதியன்று தெலுங்குநடிகர் பவன்கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி தருவதாக அறிவித்தார்.அவரைத் தொடர்ந்து பல்வேறு தெலுங்கு நடிகர்களும் நிதியுதவி அறிவித்திருக்கின்றனர்.

தொழிலதிபர் ரத்தன் டாடா, 500 கோடி நிதி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில்,தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ படத்தில் நடித்த இந்திநடிகர் அக்‌ஷய்குமார் 25 கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார்.

இதுதான் இதுவரை நடிகர்கள் கொடுத்த தொகைகளில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts