சினிமா செய்திகள்

சூரரைப் போற்று புதிய வெளியீட்டுத் தேதி – சூர்யா அறிவிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சூரரைப் போற்று படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடவிருக்கிறோம் என்றும் அக்டோபர் 30 ஆம் தேதி அப்படம் இணையத்தில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

டிசம்பர் 22 அன்று சூர்யா வெளீயிட்ட அறிக்கையில், சூரரைப் போற்று’ திரைப்படம் விமானத் துறையை பற்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயம் எனபதாலும், உண்மையான விமானப் படை விமானங்களையும் பயன்படுத்தியதாலும் நாங்கள் ஏராளமான அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது. இன்னும் சில அனுமதிகள் நிலுவையில் இருப்பதால், இது போன்ற தருணத்தில நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு இப்படத்துக்கான காத்திருப்பு தவிர்க்க முடியாததாக ஆகிறது.

நம் இதயத்துக்கு நெருக்கமான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் கதை ஈர்க்கக் கூடியதாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இப்படத்தின் வெளியீடு தாமதமாகிறது

என்று சொல்லியிருந்தார்.

அதன்பின், அக்டோபர் 26 அன்று அதாவது இன்று சூரரைப்போற்று முன்னோட்டம் வெளியாகிறது என்று சூர்யா சொல்லியிருந்தார்.

முன்னோட்டத்தோடு சூரரைப்ப்போற்று படத்தின் வெளீயீட்டுத் தேதியையும் சூர்யா அறிவித்திருக்கிறார். அதன்படி நவம்பர் 12 ஆம் தேதி அப்படம் வெளியாகவிருக்கிறது.

தீபாவளிக்கு இரண்டுநாட்கள் முன்பாக இப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts