September 7, 2024
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்கிறார்

விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 

அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். 

நேற்று மாலை 5 மணிக்கு அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அப்படத்தைத் தயாரிக்கவிருக்கும் சேவியர் பிரிட்டோ  அறிவித்தார்.

இன்று (அக்டோபர் 1) மாலை 5 மணிக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் 64 படத்தில் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகராக விளங்கும் ஆண்டனி வர்கீஸ் நடிக்கிறார் என்கிற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ம்லையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற அங்காமாலி டைரிஸ் படத்தில் நாயகனாக நடித்தவர் இந்த ஆண்டனி வர்கீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts