அரசியல்வாதி கதாநாயகன் ஆனார் – அக்டோபர் 18 படம் வெளியாகிறது
தற்போது, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு விருதுநகர் மண்டல பொருளாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நரிக்குடி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருப்பவர் கே.சி.பிரபாத்.
அங்காரகன்,தேவராட்டம் புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.அதன்பின் பில்லா பாண்டி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கருப்பு பெட்டி.தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார்.சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை எஸ்.தாஸ் இயக்கியுள்ளார்.
படம் பற்றி இயக்குநர் தாஸ் கூறியதாவது….
விமானத்துக்குக் கருப்பு பெட்டி என்பது முக்கியம். விபத்து நடந்தால் அதைத்தான் முதலில் தேடுவார்கள். இந்தக் கதையிலும் கருப்பு பெட்டி போன்ற முக்கியமான ஒன்றுதான் கதையில் திருப்புமுனையாக இருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்துள்ளோம்.குடும்பஸ்தனாக இருக்கும் நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரணச் சிக்கல்,அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுதான் படம். மனரீதியான சிக்கல் ஒன்றை இதில் பேசியிருக்கிறோம்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்.அண்மைக்காலமாக கமல்,ரஜினி, விஜய் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களின் நீளமே அப்படங்களுக்குப் பின்னடைவு என்று சொல்லப்பட்டது.எங்கள் படம் 2 மணி நேர படம்தான்.கண்டிப்பாக திரைக்கதை போரடிக்காமல் செல்லும்.இப்படத்துக்குத் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படம் அடுத்த வாரம் அதாவது அக்டோபர் 18 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.










