சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தின் இயக்குநர் மற்றும் விவரங்கள்

தனுஷ் இப்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெரிய அளவில் அரங்கம் அமைத்து அதில் நடைபெற்றுவருகிறது.

வரும் 22 ஆம் தேதியன்று தனுஷ் அந்தப்படப்பிடிப்பில் இணைகிறாராம்.மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் வரை அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் தனுஷின் 50 ஆவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அந்நிறுவனம் சனவரி 18,2023 அன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப்படத்தை இயக்கப்போவது யார்? என்பது உள்ளிட்ட எந்த விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.

அதற்குக் காரணம், இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில்தான் தொடங்கவிருக்கிறது என்பதால், அந்த நேரத்தில் மற்ற நடிகர் நடிகைகளின் தேதிகளை உறுதி செய்துவிட்டு அதன்பின்பு அறிவிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

அதோடு இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் எதிர்பார்க்கிறாராம். அனிருத் இப்போது ஒப்புக்கொண்டுள்ள படங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணம் ஆகியனவற்றால் அவரால் இந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு வேலை செய்யவியலுமா? என்பது தெரியாத நிலை இருக்கிறதாம்.

இதனால் அவருடைய நிலை முழுமையாகத் தெரிந்த பின்னர் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

எல்லாம் சரி, அந்தப்படத்தை இயக்கப்போவது யார்? என்கிற கேள்விக்கு தனுஷ்தான் இயக்குநர் என்கிறார்கள். அவர் ஒரு கதையை சன் நிறுவனத்திடம் சொல்லி அது சரி என்கிற நிலை வந்தபின்னே தான் இந்த அறிவிப்பு வெளியானது என்றும் சொல்கிறார்கள்.

எல்லாம் திருச்சிற்றம்பலம் வெற்றி காரணமாக நடக்கிறது.

Related Posts