சினிமா செய்திகள் நடிகை

ஓவியா பிறந்தநாள் – கொண்டாடித் தீர்க்கும் ஓவியா ஆர்மி

ஹெலன் நெல்சன் என்கிற இயற்பெயர் கொண்டவர் நடிகை ஓவியா. இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார்.

தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாளப் படம் தான் ஓவியாவின் முதல் படம்.

2010 ஆம் ஆண்டு களவாணி படம் வெளியாகி வெற்றி பெற்றது.
அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு உட்பட பல படங்களில் நடித்தார்.

ஆனாலும் அவர் முன்னணி நடிகையாக முடியவில்லை.

2017 ஆம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

அதன்பின் ஓவியா ஆர்மி என்கிற பெரிய கூட்டம் அவருக்கு உருவானது.

ரஜினி,விஜய்,அஜித் போன்று பெரும் ரசிகர்படையைக் கொண்ட முன்னணி நடிகர்களுக்குச் சவால் விடுமளவுக்கு ஓவியா ரசிகர்கள் அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றனர்.

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்த அவர் இன்று தனது 28 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனால் நள்ளிரவிலிருந்து அவர் ட்விட்டரில் ட்ரெண்டாக இருக்கிறார்.

Related Posts