சினிமா செய்திகள்

சூர்யா 40 படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், வினய் உட்பட பலர் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சூர்யா 40 என்றழைக்கப்படும் இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.அப்போது நாயகன் சூர்யா படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஒருவாரம் மட்டும் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.அதன்பின், மார்ச் 13 மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.

தொடர்ந்து நடந்த படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது.

அதன்பின் ஜூலை 12 ஆம் தேதி முதல் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இந்நிலையில் ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளையொட்டி இன்று மாலை ஆறு மணிக்கு இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை அறிவிக்கப்பட்டது.

அதன்படி சூர்யா 40 படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சின்னதாக ஒரு முன்னோட்டமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Related Posts