சினிமா செய்திகள்

இரண்டு நாட்களில் 26 பேருக்கு கொரோனா அறிகுறி – பொன்னியின் செல்வன் படக்குழு பதட்டம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில்,ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கியது. அதன்பின் பல தடைகள் சிக்கல்களைத்தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. கொரோனா அச்சுறுத்தல் வந்ததால் வேலைகள் நின்றுபோயிருந்தது.

இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால் பொன்னியின்செல்வன் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஜூலை 20 அன்று புதுச்சேரியில் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கியதுமே சிக்கலும் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.சுமார் முன்னூறு பேர் கொண்ட படக்குழுவில் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே சுமார் 26 பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டு அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

குறிப்பாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே நடந்த அரங்கம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததென்றும் அது அப்படியே மற்றவர்களுக்கும் பரவியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் படக்குழுவுக்குள் பதட்டம் இருந்தாலும் மூன்றாவது அலை வருவதற்குள் முதல்பாகத்தை நிறைவு செய்யவேண்டுமென்பதற்காக வேகவேகமாகப் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

Related Posts