சூர்யா 39 படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது.
இன்று சூர்யாவின் பிறந்தநாள. இதனால், அவர் நடிக்கும் 39 ஆவது படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு ஜெய்பீம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தை, கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். மணிகண்டன் ரஜிஷாவிஜயன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் முதலில் கெளரவத் தோற்றத்தில் சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
படத்தில் வழக்குரைஞராக நடிக்கும் அவருடைய வேடம் போகப் போகப் பெரிதாகிவிட்டது. இதனால் இது அவருடைய 39 ஆவது படம் ஆகிவிட்டது.
2020 மார்ச் 8 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் தொடங்கியது. பல இடைவெளிகளுக்குப் பின் அண்மையில் டிஆர் தோட்டத்தில் இப்படத்தின் இறுதிப்படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.ஷான்ரோல்டன் இசைய்மைக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.