ரஜினி 169 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த்தின் 169 ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார் என்பதை இன்று மாலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு காணொலி ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் மூவரும் தோன்றுகின்றனர்.
தலைவர் 169 என்கிற பெயரில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பை ரஜினி இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.