சினிமா செய்திகள்

தமிழ்ச் சூழலில் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் – மகாமுனி படத்துக்குப் பாராட்டு

மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் மகாமுனி.

ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் நாளை ( செப்டம்பர் 6,2019) வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது.

அப்போது படம் பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டிப் பேசிவருகிறார்கள்.

மத்திய மாநில அரசுகளை விமர்சிப்பது ஆணவக்கொலைகாரர்களை அதிரடியாகத் தண்டிப்பது என்பது உட்பட பல நல்ல கருத்துகளோடு படம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யும் சில வசனங்களை ஒலிக்கவிடாமல் செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி தமிழகச் சூழலிலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

Related Posts