சினிமா செய்திகள்

கார்த்தி ஆர்யா இல்லை – பையா 2 பட நாயகனை முடிவு செய்த லிங்குசாமி

கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா.ந.லிங்குசாமி இயக்கியிருந்த படம் இந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன.

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம்பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார்.

மீண்டும் கார்த்தியையே நடிக்கவைக்க முயன்றார். அது நடக்கவில்லை என்றதும் ஆர்யாவை அணுகினார் ந.லிங்குசாமி.
கதை கேட்டு சம்மதம் சொன்ன ஆர்யா, அதன்பின் நடந்த சம்பளம் உள்ளிட்ட மற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்பாடு ஏற்படாததால் பையா 2 வில் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டார்.

அதன்பின் பையா 2 படத்தின் கதை குறித்து கார்த்தியிடம் பேச இயக்குநர் ந.லிங்குசாமி முயன்றுள்ளார். அந்த முயற்சி வெற்றி பெற்று கார்த்தியைச் சந்தித்திருக்கிறார்.

அப்போதும் ந.லிங்குசாமியின் முயற்சி வெற்றிபெறவில்லை.

இதனால், பையா 2 படத்தில் நடிக்க வேறு நாயகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் ந.லிங்குசாமி.

அவர் முயற்சி திருவினையாகியிருக்கிறதாம்.

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் இப்போது கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.அவர் இப்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் புதியபடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தில் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருக்கிறதாம்.

இந்நிலையில், பையா 2 படத்தில் அவரை நாயகனாக்க னுடிவு செய்திருக்கிறார் ந.லிங்குசாமி.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நிறைவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விஷ்ணுவர்தன் படம் குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை.அப்படத்தின் அறிவிப்பை முதல்பார்வையுடன் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.விரைவில் அது வெளிவரும் என்கிறார்கள்.

அந்த அறிவிப்பு வந்த பின்பு பையா 2 படத்தில் ஆகாஷ் கதாநாயகன் என்கிற அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

கார்த்தி, ஆர்யா போல் இல்லாமல் இந்தமுறையாவது நல்ல முறையாக நடந்தால் நல்லதுதான்.

Related Posts