September 18, 2021
சினிமா செய்திகள்

சூர்யா 40 அடுத்தகட்டப் படப்பிடிப்பு விவரங்கள்

சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.அப்போது நாயகன் சூர்யா படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஒருவாரம் மட்டும் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

அதன்பின், மார்ச் 13 மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.

தொடர்ந்து நடந்த படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது.

அடுத்தகட்டப் படப்பிடிப்பை காரைக்குடியில் ஒரு மிகப்பெரிய வீட்டை எடுத்து அதற்குள் பெரும்பகுதிப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அவ்வீடு தவிர சுற்றுப்புறங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்படுமாம்.

படத்தின் கதைக்களம் ஒரு நடுத்தரமான நகரம் என்பதால் அதற்கு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் சரியாக இருக்கும் என்பதால் அங்கே செல்லவிருக்கிறார்கள்.

ஜூலை 12 முதல் ஆம் தேதி முதல் அங்கே படப்ப்டிப்பு தொடங்கவிருக்கிறதாம்.முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகளை வைத்து அங்கேயே சுமார் ஐம்பதுநாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts